புதுவருட தின நல்வாழ்த்துகள்

 வணக்கம் 


என் அன்பும் நட்பும் மறவா உறவுகளே 

✨ ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதில் கொண்டு புத்தாண்டை வரவேற்போம்.

✨ அதேபோல்தான் பல கனவுகளை சுமந்து 2020ஆம் ஆண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாடி வரவேற்றோம்.

✨ நாம் எதிர்பார்த்தது ஒன்று.. நடந்தது ஒன்று என்பது போல 2020ஆம் ஆண்டு பல மறக்க முடியாத நிகழ்வுகளை மனதில் தேக்கி வைத்துள்ளது.

பொருளாதார சிக்கல்கள்

வாழ்வாதார பாதிப்புகள்

பாடசாலை மாணவர்களின் கல்வி கற்றல் செயற்பாடுகள்

புரெவி புயல் 

நிர் புயல் 

சினிமாத்துறை கண்ட சரிவு மற்றும் இழப்பு

✨ என கடுமையான சோதனைகளும், வேதனைகளும் நிறைந்த 2020ஆம் ஆண்டு  விடைபெற்று உள்ளது.

✨ 2020ஆம் ஆண்டு சோதனைகளை கடந்து வந்த ஆண்டாக அமைந்து இருந்தாலும், இந்த கடுமையான சூழலில் பல நல்ல நிகழ்வுகளையும் நாம் கடந்து வந்திருப்போம்.

✨ என்னதான் 2020ஆம் ஆண்டு பல்வேறு சோதனைகளை கொடுத்திருந்தாலும்,

✨ பள்ளி குழந்தைகளுக்கும்

✨ கல்லூரி மாணவர்களுக்கும் 

✨ ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் என இந்த ஆண்டு வித்தியாசமான சவால்களை கொடுத்துள்ளது.

✨ அதுபோல் அலுவலக வேலைகளை வீட்டில் இருந்து செய்வது சாத்தியமா? என்ற கேள்விக்கு, சாத்தியம் தான் என 2020ஆம் ஆண்டு கற்று கொடுத்துள்ளது.

#2020ஆம் ஆண்டு நமக்கு கொடுத்த வாழ்க்கை சவால்களை, பாடங்களாக எடுத்து கொண்டு 

மலர்ந்திருக்கும் இந்த #2021 புதுவருடத்தை இன்முகத்தோடு வரவேற்போம்.



அனைவருக்கும் புதுவருட தின நல்வாழ்த்துகள் 

MOHANASELVARAJ