மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு- சீறி பாய காத்திருக்கும் காளைகள்

 


மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு- சீறி பாய காத்திருக்கும் 783 காளைகள் 

மதுரை பாலேமட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு விழா நடைபெறுகிறது. இதில் மொத்தம் 783 காளைகள் பங்கேற்கின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நேற்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் 2-ம் நாளான மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 26 காளைகளை அடக்கிய விஜய் மற்றும் திருநாவுக்கரசு இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக காளைகளை நிறுத்தும் இடத்தில் உரிமையாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.