தமிழகத்தில் ஆளுநர் 72வது குடியரசு தின கொடி ஏற்றி பதக்கம் வழங்கினார்

 


           72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் முப்படை அணிவகுப்பு மரியாதையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்கிறார்.

72 வது குடியரசு தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடிk. பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் ,எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களில் கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சி  நடைபெற்று பார்வையிட்டு வருகின்றனர்

தமிழக அரசின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் மதுரையை சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு வழங்கப்பட்டது


       தமிழக அரசின் அண்ணா பதக்கம்


வன யானைகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கியமைக்காக கால்நடை மருத்துவர் பிரகாசுக்கு அண்ணா பதக்கம்; மத நல்லிணக்கத்தான கோட்டை அமீர் விருது கோயமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கு வழங்கப்பட்டது.


          தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் கோப்பை, சேலம் நகர காவல் நிலையம், திருவண்ணாமலை நகர காவல் நிலையம் மற்றும் சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையங்களுக்கு வழங்கப்பட்டது

தமிழர் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரகக்கு  காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமை காவலர்கள் சண்முகநாதன் ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவகுமாருக்கு திருத்திய நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு  விருந்து வழங்கப்பட்டது.

சிலம்பாட்டம் கரகாட்டம் பொய்க்கால் ஆட்டம் ஆடும்  கிராமிய கலைஞர்கள் நிகழ்ச்சியை ஆளுநர் முதல்வர் கைத்தட்டல் உடன் கண்டுகளித்து பார்வையிட்டனர்.

சென்னை குடியரசுதின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.