இன்றைய (27.01.2021) நாளின் ராசி பலன்கள்

 

மேஷம்

இன்று சலிப்பூட்டும் நாளாக காணப்படும். இருந்தாலும் திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால், உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நிதி வளர்ச்சி குறைவாக காணப்படும்.

ரிஷபம்

இன்றைய நாள் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். நேரத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.   உங்கள் பொறுமை சோதனைக் உள்ளாக்கப்படும். பணியிட சவால்களை சந்திக்க பொறுமை அவசியம்.

கடகம்

இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீக செயல்பாடுகள் மூலம் ஆறுதலை பெறுவீர்கள். செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம்.

சிம்மம்

இன்று ஆன்மீகத்தில் ஈடுபடலாம். அமைதியாக இருக்க ஒரே வழி பிரார்த்தனையாகும். உங்கள் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள்.

கன்னி

இன்று பரபரப்பாக இருப்பீர்கள். உங்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்வீர்கள். நிதிநிலைமை திருப்தியளிக்கும்.

துலாம்

திட்டமிட்ட முறையான அணுகுமுறை மூலம், இந்த நாள் மதிப்புமிக்கதாக்குவீர்கள். உங்கள் சிறந்த தகவல் பரிமாற்றத் திறன் மூலம், சிறந்ததை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

இன்று தேவையற்ற மனக் கவலைகள் இருக்கும். அதனை தவிர்க்க நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

தனுசு

இன்று அமைதியும், கட்டுப்பாடும் தேவை. முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும்.

மகரம்

இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். சமயோசிதமாக செயலாற்றினால் என்று உற்சாகமாக இருக்கலாம். மேல் அதிகாரியிடம் இருந்து எதிர்பாராத ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும் ஆரோக்கியம் குறைந்து காணப்படும்.

மீனம்

இன்று உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்றாலும், எச்சரிக்கையாக காணப்படவேண்டும். சரியாக திட்டமிட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.