நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.அதாவது வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்ற உள்ள உரையை காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.