தமிழகத்தில் மேலும் கொரோனா

 
தமிழகத்தில் மேலும் 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,05,777 ) 8 லட்சத்து 05 ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  


* தமிழகத்தில் மேலும் 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,05,777 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,84,117 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,202 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,968 ஆக உயர்ந்துள்ளது.