பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத ஒளிபரப்பிற்கு எதிர்ப்பு

 


அரசின் பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


அரசு தொலைக்காட்சியான பொதிகை தொலைக்காட்சியில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கப்படும். 


இதோடு ஒவ்வொரு சனிக்கிழமையும் சமஸ்கிருத மொழியில் செய்தி தொகுப்பும் வாசிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளிப்ப டுத்தி வருகின்றனர். 


இதன்ஒருபகுதியாக கோவை டாக்டர்.பாலசுந்தரம் சாலையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தை தபெதிக அமைப்பினர் வெள்ளி யன்று  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


முன்னதாக, இப்போராட்டத்தை ஒடுக்க  காவல் துறை சார்பில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு  இருந்தது. இதனையும் மீறி போராட்டக் காரர்கள் பொதிகை அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் செல்ல முயன்றனர். 


இதனால்  தள்ளு முள்ளு ஏற்பட்டு,  பரபரப்பான சூழல் நிலவியது. 

இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட தபெதிக அமைப்பின் பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன் உட்பட அனைவரும் கைது செய் யப்பட்டனர். 


பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்க மத்திய அரசு  பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்  கலைஞர்கள்  சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் பொதிகை தொலைக்காட்சி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.