விமான கட்டண தொகையை திருப்பி வழங்க 'இண்டிகோ' முடிவு

 




ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ரத்தான விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், அவர்கள் செலுத்திய கட்டண தொகையை, வரும், ஜனவரி, 31ம் தேதிக்குள் திருப்பி வழங்க, 'இண்டிகோ' விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அப்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், கட்டண தொகையை திருப்பி வழங்க, இண்டிகோ விமான
நிறுவனம் முடிவு செய்துள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மார்ச் மாத
இறுதியில், எங்கள் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால், எங்கள் நிறுவனத்தில், 


பணப்புழக்கம் முற்றிலும் இல்லாமல் போனது. அதன் காரணமாக, ரத்தான விமானங்களில் முன்பதிவு செய்த பயணியருக்கு, கட்டண தொகையை உடனடியாக செலுத்த முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டது. இப்போது, எங்கள் விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன


எனவே, அந்த பயணியருக்கு, கட்டண தொகையை திருப்பி வழங்கவேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி, 31ம் தேதிக்குள், அனைத்து பயணியருக்கும், 100 சதவீத கட்டண தொகையை, திருப்பி வழங்க முடிவு செய்துஉள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.