இரு வரி செய்திகள்..... உண்மை செய்திகள்

 மதுரை எல்லீஸ்நகர் அரசு போக்குவரத்து பணி மனையில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ரூ.15 லட்சம் கொள்ளை போனது தொடர்பாக பணிமனை மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 கொள்ளை தொடர்பாக முதல்கட்டமாக பாண்டியராஜன், செல்வம், சென்றாயன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


__________________________________________


சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர். இ-பாஸ் முறையை ரத்து செய்தால் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


பொதுமக்கள் நலன் கருதி தேரோட்டம் நடத்தப்படும் என தீட்சிதர்கள் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

________________________________________


மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.

______________________________


தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாததால் வீட்டில் தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

__________________________________


ஐசிசி விருதை மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன் என விராட் கோலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விருது பெற உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும், நண்பர்களுக்கும் நன்றி எனவும் கூறினார்.