புயல், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு

 


புயல், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார்.

ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை முடுக்கி விட 12 அமைச்சர்களை முதலமைச்சர் நியமித்திருந்தார். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் மற்றும் கனமழையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் மற்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும் அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஏரிகள் நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் அங்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. எனவே கடந்த 25–ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு நேரில் சென்று ஏரியை பார்வையிட்டார். மதகுகளில் உபரிநீர் திறந்து விடப்படுவதையும் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே பார்வையிட்டார்.

__________________________

சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 300 கோடியில் 18 துணை மின் நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திருவள்ளூரில் புதிய ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம் : திருவாரூர், கோவையில் ரூ.8 கோடியில் 5 பாலங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

_____________________________