இவ்வளவு விவசாயிகளை கட்சிகளா திரட்டின-பிரியங்கா காந்தி

 


பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தேசத்தின் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தப் போராட்டத்துக்கும், டிசம்பர் 8 ஆம் தேதி விடுத்த `பாரத் பந்த்' போராட்டத்திற்கும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டம் எதற்காக நடக்கிறது என்ற அடிப்படைக் கேள்வி நிறைய வாசகர்களுக்கு இருக்கிறது. கூகுள் தேடலில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு எளிய நடையில் நாங்கள் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறோம்.

மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். 

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் எந்தத் திருத்தங்கள் செய்வதையும் அவர்கள் விரும்பவில்லை. 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டி மூன்றுசட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எம்.எஸ்.பி. விலைக்கும் குறைவாகக் கொள்முதல் செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றும், உணவு தானியங்களை - குறிப்பாக கோதுமை, நெல் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அம்சங்கள் குறித்து விவசாய தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. 

தனியார் துறையினரை ஒழுங்குபடுத்தப்பட்ட, வரியுடன் கூடிய கட்டமைப்புக்குள் கொண்டு வரவும், எம்.எஸ்.பி. முறையை தொடர்வது, ஏ.பி.எம்.சி.களை பலப்படுத்துவது குறித்து எழுத்துபூர்வ உறுதி அளிக்கவும் அரசு தயாராக இருப்பதாக, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளும், மற்ற தகவல்களும் தெரிவிக்கின்றன.


YouTube

காங்கிரசை, ‘வலுவிழந்து விட்டது; எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை’ என்று கூறுகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான விவசாயிகளை நாங்கள்தான் தில்லியில் கொண்டுவந்து நிறுத்தி யுள்ளதாகவும் கூறுகின்றனர். இதில் எது உண்மை? பாஜக தெளிவுபடுத்துமா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.