இரு வரி செய்திகள்..... உண்மை செய்திகள்

 தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யசோதா சிகிச்சை பலனின்றி காலமானார்.

______________________________________

ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் என சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது; எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவரது சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார்.

_______________________________________


புதுச்சேரியில் அரசு பேருந்துகளை இன்று முதல் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

__________________________

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார்

____________________________

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஆதார் இணைக்க கோரிய முடிவை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்துள்ளது.