சுக்கிரன் தரு​ம் பொது பலன்கள்

 சுக்கிரன் தரு​ம் பொது பலன்கள்

சுக்கிர பெயர்ச்சி எப்போது? -

வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் ஆண் தன்மையும், சுக்கிரன் பெண் தன்மையும் உடைய கிரகங்கள். பரிபூரண ஆண் கிரகமான செவ்வாய் முழுமையான பெண் தன்மையைக் கொண்ட சுக்கிரனுடன் இணைவது, சுக்கிரனை முழுக்க முழுக்கப் பலவீனப்படுத்தும்.

அறிவியலின் படி சுக்கிர கிரகம் பிரகாசமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது, மேலும் இது பூமிக்கு மிக அருகில் உள்ளது.

ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் ஒரு கிரகம், உங்கள் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குகிறது. 

சுக்கிரனால் பெறப்படும் சிறப்பான யோகங்களில் மாளவ்ய யோகம் மிகவும் முக்கியமானது. ஒருவருக்கு சுக்கிரன் லக்ன கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவதால் வரும் யோகம் இது. லக்னம் வலுவிழந்து ராசி வழி நடத்தும் நிலையில் சந்திரனுக்கு கேந்திரங்களிலும் இந்த யோகம் பலன் தரும். ஆனால் லக்ன கேந்திரமே முக்கியமானது.

எந்த லக்னமாக இருந்தாலும் ஒருவருக்கு மாளவ்ய யோக அமைப்பில் சுக்கிரன் அமர்ந்து சரியான பருவத்தில் அவரது தசையும் வருமாயின் சுக்கிரனின் காரகத்துவங்கள் முழுமையாகக் கிடைக்கும். 

சுக்கிரனின் தசையோ, புக்தியோ நடக்கும்போது திருமணம், வீடு, வாகனம் போன்ற அடிப்படைத் தேவைகளை சுக்கிரன் நிறைவேற்றித் தருவார்.

அசுர குரு   சுக்ரன்  ஆவார்.  இவர்   இகலோக   ஆசையை   அளிப்பவர்.   சுக்ரன்   விடி  வெள்ளி  பிரகாஷமாக   தெரியும்  - இளமையாக   இருப்பவர்கள்   ஜொலிப்பார்கள்  ஆக   இளமையும்,  ரசனையையும்  அளிப்பவர்.  ஆடல்  பாடல்   முதலான   நளின   கலைகளுக்கு   நாயகன்,  மனைவியைக்   கொடுத்து    மகிழ்ச்சிகாரமான    இல்லற   வாழ்க்கையைத்  துவக்கி   வைத்துப்   பரிபாலனம்  செய்வர்.

சுக்ரன் தொழில்
வேஷக்காரன்,   நடிகர்கள்,    கலைத்துறைக்காரன்கன்,  ஒப்பனைப் பொருட்கள்,  அலங்கார   வஸ்த்துக்கள்,  ஆடம்பர  வஸ்துகள்,  சுக்ரன்  என்றால்    வெள்ளை   என்று  பொருள்,  வெண்மை   பொருள்கள்   அனைத்துக்கும்   காரகன்,    சுக்கில  பட்சம் ,  வைரம்   மிக    பிரகாஷம்  ஜொலிப்பது  போல்  எல்லாம்   சுக்கிரன் ,  இளம் பெண்   குறிப்பது  சுக்ரன், விடியற்  காலை   பொழுத்தைக்  குறிப்பவர்   இவர்,   வான்   மண்டலத்தில்   விடியல்   காலை  பொழுதில்   சுக்ரன்   தெரிகிறார்.   அதிகாலையில்   மனிதனுக்கு  காமக் கிளர்ச்சியை   ஏற்படுத்துவதும்   இவர்  தான்.  காமத்துக்   காரன்   சுக்ரன்.

களத்திரகாரகன் சுக்ரன்


சுக்ரன்    இல்லற்   வாழ்வுக்குறியவர்,  சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு   மனைவியைப்பற்றியும்,  பெண்ணுக்கு  மண   வாழ்க்கையைப்  பற்றியும்  சொல்லுகின்றவர்.   உலக   வாழ்கையில்     இன்பமும்  செளபாக்கியங்களையும்   சுக  போக    செளரியங்களையும்  தருபவன்  சுக்ரன்.   

வாகன  வசதிகளை       அளிப்பவர்   இவர்,  மிக  உயர்ந்த    வாகனமா,  நடுத்தரமான   வாகனமா,  கடைசி   நிலை    வாகனமா,  ஒன்றுக்கு   மேற்பட்ட   வாகனமா  என   குறிப்பவர்   இவர்தான்.

ஒருவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்யக்  கூடியவர்  இவர்.
கையில்   காசுடையவர்களாய்   வைப்பரும்,   சொந்த  வீடு அளிப்பவரும்  இவர்தான்,  கலை  உலகில்   சிறப்பான   நிலையை  அளிப்பவர்.  பெண்களிடம்  மோகத்தை  அளிப்பவரும்,  வாழ்நாள்   முழுவதும்   அதே  நினைப்பில்   இருக்க  வைப்பவர்  இவர்தான்.

ஜோதிடத்தில் சுக்ரன் தரும் யோக பலன்கள்


சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.

சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.

சுக்கிரன் 4ல் இருந்தால்
நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.

சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.

சுக்கிரன் 6ல் இருந்தால்
உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண்களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.

 சுக்கிரன் 7ல் இருந்தால் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.


சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.


சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.

சுக்கிரன் 11ல் இருந்தால்
நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.

சுக்கிரன் 12ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.

2020 கடைசி மாதத்தில் சுக்கிரன் டிசம்பர் 11 ஆம் தேதி, செவ்வாய் ஆட்சி செய்யக்கூடிய விருச்சிக ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆக உள்ளார்.

நம் வாழ்வில் மகிழ்ச்சி, பொருள் வரவு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் சுக்கிரன் திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவு தொடர்பான விஷயங்கள் கட்டுப்படுத்துகிறார்.