பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே புரெவி புயல் நாளை கரையைக் கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாலச்சந்திரன், ' புரெவி புயல் பாம்பனில் இருந்து 40 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
மணிக்கு 13 கிமீ வேகத்தில் [பாம்பனை
நெருங்கி வருகிறது. இந்த புயல் பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே புரெவி
புயல் நாளை கரையைக் கடக்கும்.
இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது
மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதன் காரணமாக
இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும்.