லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

 லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது.

அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.