குங்குமத்தை சாப்பிட்டு உயிரிழந்த பெண்.

 கணவர் வேலை பார்க்கு ஊருக்கு கூட்டி செல்லவில்லை என்பதால் குங்குமத்தை சாப்பிட்டு உயிரிழந்த பெண்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள டான்பூர் எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடியவர் தான் விகாஸ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பதாக சரஸ்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். விகாஸ் சூரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக விகாஸ் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சூரத்திற்கு செல்ல கிளம்பியுள்ள விகாஸ்.

ஆனால், அவரது மனைவி சரஸ்வதியும் உடன் வருவதாக சண்டையிட்டதால், இரண்டரை வயதுடைய நமது குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள், நீ வீட்டில் இரு என கூறிவிட்டு அவர் விட்டு சென்றுள்ளார். 

இதனால் விரக்தியடைந்த சரஸ்வதி குங்குமத்தை எடுத்து உட்கொண்டுள்ளார். 

கணவர் ஊருக்கு அழைத்து செல்லவில்லை என்பதால் குங்குமத்தை உட்கொண்டு உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.