பிக் பாஸ் அனிதா சம்பத் வீட்டில் சோகம் ....தந்தை திடீர் மரணம்

 
தமிழ் ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்  அனிதா சம்பத். தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் தனித்துவமாக விளையாடினார். மேலும் பிக்பாஸில் தான் வளர்ந்த விதம், எதிர்கொண்ட பொருளாதார பிரச்னைகளைக் கூறிய அனிதா நடுத்தர  குடும்பத்தின் முகமாக இருந்தார் என்றும் சொல்லலாம்.


84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா, 10-வது போட்டியாளராக பார்வையாளர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று கடந்த வார இறுதியில் வெளியேறினார். அவரது வீட்டில் தற்போது எதிர்பாராத மரணம் நிகழ்ந்துள்ளது.அனிதா சம்பத்தின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்து அனிதா சம்பத் தந்தையை பார்க்கவில்லை அவர் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது