சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக் குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.
இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று இரவு அல்லது 25.12.2020 காலைக்குள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.