மருத்துவ படிப்பில் வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 


மருத்துவ படிப்பில் வாய்ப்பை தவறவிட்ட 4 மாணவர்களுக்கு தலா ஒரு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் இடம் ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்  இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கட்டணம் செலுத்த முடியாமல் சிலர் மருத்துவ படிப்பை கைவிட்டுள்ளனர். 

இதற்கிடையே, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு ஏற்கும்  என்று தமிழக அரசு அறிவித்தது.

அரசு பள்ளி மாணவி கார்த்திகாஜோதி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி ‘‘நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் அருண், மாணவிகள் சவுந்தர்யா, கவுல்சயாவுக்கு தலா ஒரு  எம்.பி.பி.எஸ் இடத்தை காலியாக வைக்க வேண்டும். 

கார்த்திகாஜோதிக்கு ஒரு பிடிஎஸ் இடம் காலியாக வைக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு பாராட்டுக்குரியது’’ என நீதிபதி தெரிவித்தார்.