சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 85.76 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.45 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
______________________
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
__________________________
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இதனால் நாளை (சனிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
______________________
நாட்டிலேயே 2-வது சிறந்த போலீஸ் நிலையமாக சேலம் சுரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது.
__________________________
கோவில்களின் கும்பாபிஷேக விழாவில் தமிழும் இடம் பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
_________________________
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
___________________________
ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.