ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை இறக்குமதி செய்யும் இந்தியா

 அமெரிக்காவிற்குப் பிறகு வைரஸ் அதிகமாக தாக்கப்பட்ட நாடு இந்தியா. கிட்டத்தட்ட ஒரு கோடிபேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. மேலைநாட்டு தடுப்பு மருந்துகளுக்கு நிகராக ஸ்பூட்நிக் வி பலன் அளிப்பதாக ரஷ்யா நம்புகிறது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு (ஆர்டிஐஎஃப்), இந்தியாவின் டாக்டர் ரெட்டி லேபரட்டரி லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்து ரஷ்ய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சோதனை செய்யவும் விநியோகிக்கவும் ஒப்பந்தம் இட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஸ்புட்னிக் -வி தடுப்பு மருந்தை உருவாக்கி சோதனை மேற்கொண்டார்.

தற்போது ரஷ்யாவின் ஸ்பூட்நிக் 5 தடுப்பு மருந்தை வாங்கவும் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு இந்தியாவின் நான்கு பெரிய மருந்து நிறுவனங்களுடன் தடுப்பு மருந்து ஒப்பந்தத்தை இட்டுள்ளது. இதன்படி முப்பது கோடி டோஸ் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்தை வாங்க திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து ரோசியா 24 செய்தி சேனலுக்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பின் தலைமை நிர்வாகி கிரில் டிரைவ் பேட்டி அளித்துள்ளார்.அவர் கூறுகையில் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஸ்புட்னிக் 5 முதற்கட்ட சாம்பிள்களை இந்தியாவில் சோதனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

95 சதவீதம் இந்த தடுப்பு மருந்து பலனளிப்பதாக முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க.து கடந்த ஆகஸ்ட் மாதம் கிராமாலயா இன்ஸ்டிடியூட் உருவாக்கிய ஸ்புட்னிக் -வி தடுப்புமருந்து குறித்து நடந்துமுடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் விளாடிமிர் புடின் பேசினார். இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளிலுமே ஸ்புட்னிக் வி தடுப்புமருந்து தயாரித்து விநியோகிக்க முடியும் என்று அவர் கூறினார்.