தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான்

 

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா  நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

 அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. அதாவது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மகர ராசியில் 20.12.2023- வரை வீற்றிருந்து பலன்களை வழங்க உள்ளார். 

கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  சனிப்பெயர்ச்சிக்காக திருநள்ளாறு சனீஸ்வர கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி நடக்கும்.

சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்த்து பலன் தர உள்ளார்.

இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

கண்ட சனி - கடக ராசி

அர்த்தாஷ்டம சனி : துலாம்

அஷ்டமத்து சனி : மிதுனம்

விரய சனி : கும்பம்

ஜென்ம சனி: மகர ராசி

பாத சனி, வாக்கு சனி : தனுசு ராசி