மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம்: இஸ்ரோ தலைவர் சிவன்

 



கொரோனா தொற்று நோய் காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். 

பெங்களூரு : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2022-ம் ஆண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையில் பணியாற்றும் 3 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரஷியாவில் விண்வெளி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.