செல்போன் திருடர்கள் கைது

 வடசென்னையில்  தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்த ஏழுமலை (29), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பிரதாப் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


பைக் திருடர்கள் கைது: வடசென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கொடுங்கையூர் எருக்கஞ்சேரி மணிகண்டன் (21), லிங்கபெருமாள் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து, 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.