சனிப்பெயர்ச்சி 2020-2023 ஓர் கண்ணோட்டம்.

சனிப்பெயர்ச்சி 2020-2023 ஓர் கண்ணோட்டம்..!!



சனிப்பெயர்ச்சி 2020-2023 எப்பொழுது? பலம் பெறும் 3 ராசிகள்.. இது உங்கள் ராசியா?


நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.


கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதிமுக்கியமான பதவியை வகிக்கின்றார். இவர் சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.


சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?


நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.


சனிப்பெயர்ச்சியால் யாருக்கு ஏழரை சனி முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா?


சனி பெயர்ச்சி என்பது நமக்கான கஷ்ட காலமாக கருதுவது சரியா என்பதையும், அவர் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை சரி செய்யவும், நம்மை வழிபடுத்தவும் வருகின்றார்.


அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும்.


அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.


நவகிரகங்களின் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சிக்கு அதிகம் பயப்படுகின்றார்கள்.


ஏனெனில் சனி ஒரு ராசிக்கு 2 1/2 ஆண்டு காலம் சஞ்சரிக்கின்றார்.இந்த கால காட்டத்தில் நமக்கு அதிக படிப்பினையை சனி பகவான் கொடுத்துச் செல்கிறார். அதிலும் ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும்.


நம் தலை முதல் பாதம் வரை பதம் பார்த்துவிட்டு செல்வார். இதுகுறித்து விருச்சிக ராசியினரிடம் கேட்டால் தெரியும். கடந்த 7 1/2 ஆண்டுகள் அவர்கள் பட்ட கஷ்டன்களை பட்டியலிடுவார்கள்.


2020ஆம் ஆண்டில் எப்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது?


வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.


சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளார்.


2020-2023 சனிப்பெயர்ச்சியில்- எந்தெந்த ராசிகள் பலம் பெறுகின்றன?


சனிதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக அசுப செயல்களை செய்யக்கூடியவர் ஆவார்.


சனிதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து 3, 7 மற்றும் 10 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.


சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி நடக்கும்.


சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்த்து பலன் தர உள்ளார்.


இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பாதிப்புகளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.


கண்ட சனி - கடக ராசி


அர்த்தாஷ்டம சனி : துலாம்


அஷ்டமத்து சனி : மிதுனம்


விரய சனி : கும்பம்


ஜென்ம சனி: மகர ராசி


பாத சனி, வாக்கு சனி : தனுசு ராசி


சனிதேவர் ராசிக்கு 3, 6, 11ல் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடியவர் என்று பழைய மூலநூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில்,


விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடத்திலும்


சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்திலும்


மீன ராசிக்கு பதினொன்றாம் இடத்திலும் 


இருந்து நன்மை செய்யவுள்ளார்.


இனி வருகின்ற இரண்டரை வருடம் சுப செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடைபெறும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைகூடி நல்ல பலன்களை அளிக்கும்.ஜாதக பலன்கள் யாவும் திசாபுத்தி காலக்கட்டங்களின்படிதான் நடைபெறுகிறது. ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் தொட்டு ஒருவரின் திசாபுத்திகள் தொடங்கும்.


திருநள்ளாறு : பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா!


காரைக்கால்  அருகேயுள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது


காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்ததிகொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது. அப்போது இக்கோயிலில் திரளான பக்தர்கள் நாடெங்குமிருந்து வந்து கலந்துகொண்டு தரிசனம் செய்வர்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்