திருப்பதி கோயிலில் வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்ய அனுமதி

 நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் 300 ரூபாய் ஆன்லைன் புக்கிங் டிக்கெட்கள் மூலமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.  கொரோனா காரணமாக வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் திருப்பதி வர தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் கொரோனா தடுப்பு வழி காட்டுதல்களை முறையாக பின்பற்றி வர திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.