கோயம்பேடு சந்தையில் சிறு, மொத்த பழக்கடைகள் திறக்கப்பட்டது.

 சென்னை கோயம்பேடு சந்தையில் சிறு, மொத்த பழக்கடைகள் திறக்கப்பட்டது.


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கனி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது சில தளர்வுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


அதில் முதற்கட்டமாக 400 கடைகள் திறக்கப்பட்டது. மீதமுள்ள 300 கடைகளை திறக்க முதல்வர் பழனிசாமி அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார்.


அப்பொழுது கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்த நிலையில், 7 மாத காலமாக மூடப்பட்டிருந்த மார்க்கெட்  22.11.2020 மீண்டும் திறக்கப்பட்டது. தற்பொழுது மீதமுள்ள 300 கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.