கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு

கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு



தீபாவளியன்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். அதனால் பட்டாசின் ரசாயன துகள்கள் காற்றில் கலந்து காற்று மாசு அதிகரிக்கும்.


நவம்பரில் பனிக்காலம் என்பதால் பனி மூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்து வானை மறைத்தபடி காட்சி அளிக்கும்.


ஆனால் இந்த ஆண்டு கொரோனா பிரச்னைக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.


பொருளாதார அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொண்டாட்டம் குறைந்துள்ளது.


மேலும் தீபாவளி கொண்டாடும் மக்கள் பட்டாசு வாங்கும் செலவுகளை குறைத்தனர். இதன் காரணமாக நேற்று பட்டாசால் ஏற்படும் காற்று மாசு முந்தைய ஆண்டுகளை விட குறைந்து காணப்பட்டது.


தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தனியார் மாசு அளவீட்டு நிறுவனங்கள் அளித்த தகவல்களின்படி நேற்று பிற்பகலுக்கு பின்பே மாசு அளவு சற்று அதிகரித்து காணப்பட்டது.


அதுவும் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே இருந்ததாக அந்த அளவீடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நேற்றைய காற்று மாசு குறித்து இன்று அறிக்கை வெளியிட உள்ளது.


.