இந்தியாவில் - தமிழகத்தில் - கொரோனா தொற்றின் நிலை


இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரமாக உள்ளது.




கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், இவர்களில் 88 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 1.37 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பாதிக்கப்பட்டவர்களில் 1% பேருக்கு தான் ஏற்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 39,036 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 444 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர பாதிக்கப்பட்ட 94.32 லட்சம் பேரில் 4.48 லட்சம் பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழகத்தில் புதிதாக 1,459 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,80, 505ஆக உயர்ந்துள்ளது.












  • உயிரிழந்தவர்கள்: தமிழகத்தில், கொரோனாவால் இன்று 9 பேர் பலியாகியுள்ளனர். அதில், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்துள்ளது.




  • குணமடைந்தவர்கள்:  கொரோனாவில் இருந்து இன்று 1,471 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 7,57,750 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




  • மாதிரிகள்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,145 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,19,97,385 -ஐ கடந்துள்ளது.