தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் டெல்லி பயணம்

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.


வெள்ளி வரை டெல்லியில் தங்கி இருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்திக்க உள்ளார்.தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசிய நிலையில் ஆளுநர் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.


வேல் யாத்திரை, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் உள்ள நிலையில் ஆளுநர் இந்த பயணம் மேற்கொண்டுள்ளார்.