கணவரை காதலியுடன் சேர்த்து வைக்க விவாகரத்து செய்த மனைவி

 


திருமணமாகி 3 ஆண்டுகளாகிய நிலையில்,கணவருக்கு விவாகரத்து கொடுத்து காதலியுடன் மனைவி சேர்த்து வைத்துள்ளார் .


மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவர் திருமணத்திற்கு முன்பு வேறோரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் .


ஆனால் கணவர் திருமணமான பின்னரும் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சித்துள்ளார் .


இதனை அறிந்த அந்த பெண் உடனடியாக கணவரிடம் விவகாரத்து தருவதாக கூறி , அதனை நடைமுறையும் நடத்தியுள்ளார் .3  வருடமாக சேர்ந்து வாழ கணவன் காதலியுடன் வாழ விவாகரத்து கொடுத்துள்ளார்.


மேலும் அந்த பெண் கணவருக்கு அவரது காதலியுடன் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார் . இந்த பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதனை இவர்களது விவகாரத்து வழக்கை கையாண்ட வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


அதில் அந்த பெண்ணின் கணவர் இருவரையும் காதலிப்பதாகவும், அவர்களுடன் வாழ்க்கையை நடத்தவும் விரும்பினார் .


ஆனால் சட்டப்பூர்வமாக அது சாத்தியமில்லாத காரணத்தால் அந்த பெண் கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் சேர்த்து வைத்து உதவியுள்ளார் .