குழந்தைகள் தின வாழ்த்துக்கள் - முதல்வர்

குழந்தையும் தெய்வமும் ஒன்று, குழந்தைகள் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இன்று இந்தியா முழுவதிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வந்தாலும், சுதந்திர போராட்ட வீரர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளும் இன்று தான்.


இவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குழந்தைகளுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


அதில், குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் அந்த குழந்தையை நாட்டின் தூண்களாக வடிவமைக்கும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும்  குழந்தை செல்வங்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,