கடன் வழங்கும் மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம்.

  கடன் வழங்கும் 5 மொபைல் செயலிகளுக்கு முடிவுகட்டிய கூகுள் நிறுவனம்.


இன்றைய நாகரீக வளர்ச்சி, மனிதனை ஒரு டிஜிட்டல் உலகமாக மாற்றியுள்ளது. இன்றைய நாகரிக வளர்ச்சி எந்த காரியமானாலும் அதை சுலபமாக கையாள்வதற்கான வழிமுறைகளை இன்றைய தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை  கொடுத்து வருகின்ற நிலையில், அந்த கடனை ஒருவர் பெறுவதற்கு சில தகுதிகளை அந்நிறுவனங்கள் வரையறுத்துள்ளர். அதை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது.


தற்போது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் ஒருவரின்  KYC-யை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களும் உள்ளன. அண்மை காலமாக இந்த மாதிரியான அப்ளிகேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உலாவி வருவதாக சொல்லப்படுகிறது.


இதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு, இந்த அப்ளிகேஷன் நிறுவனங்கள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக  இணையத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. 


கொரோனா ஊரடங்கு சமயத்தில், இந்த மாதிரியான அப்ளிகேஷன் மூலம் மக்கள் கடன் வாங்கும்  நடைமுறை அதிகரித்துள்ளது.


இந்த அப்ளிகேஷன்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வளர்ந்து வரும் நிறுவனங்களின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட இருப்பதால்,  அறியாமையினால் மக்கள், இந்த அப்ளிகேஷனில் விழுந்து சிக்கிக்கொள்கின்றனர். 


இந்த அப்ளிகேஷன்கள் மூலம் பல லட்ச கணக்கில் கடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனம்  ok cash, go cash,flip cash,e cash, snapltloan என ஐந்து அப்ளிகேஷன்களை, கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.