குஜராத் & மத்தியப் பிரதேசத்தில் நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு

 



குஜராத் நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு:


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கவும் குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர, நேற்று முதல் நவம்பர் 23 வரை அகமதாபாத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அதிரடி உத்தரவு விதிக்கப்பட உள்ளது.


அதன்படி, இன்று முதல் இந்தூர், போபால், குவாலியர், விடிஷா, மற்றும் ரத்லம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார்.


இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விதிக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகளில் உள்ள நபர்களுக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.