பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

 பயணிகளின் வசதிக்காக இன்று முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவே தெரிவித்திருந்தது.


அதன்படி, நவராத்திரி விழாவை கொண்டாடி விட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக வழக்கமாக காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயிலை காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.