சுஷில் மோடியை துணை முதல்வராக நிறுத்தக்கூடாது என்பது பாஜகவின் முடிவு

 பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து நிதிஷ் முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.


இவரை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைவர்களான தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் பீகார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.


பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பொதுமக்களின் முடிவின் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பீகார் மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ளது.


நாங்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவை செய்வோம் என தெரிவித்தார். சுஷில் மோடியை துணை முதல்வராக நிறுத்தக்கூடாது என்பது பாஜகவின் முடிவு. இது குறித்து அவர்களிடம் கேட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.