அமெரிக்க அதிபரின் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவில் ஈரோடு பெண் டாக்டர்


அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடென் அமைத்த கொரோனா தடுப்பு சிறப்பு குழுவில் ஈரோடு பெண் டாக்டர் இடம் பெற்றுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடென், கொரோனா தொற்றை எதிர்த்து போரிட ‘கொரோனா டாஸ்க் போர்ஸ்’ என்ற சிறப்பு மருத்துவ குழுவை அமைத்துள்ளார்.


இக்குழுவில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் செலின் கவுண்டர் (45) இடம்பெற்றுள்ளார். இது, ஈரோடு மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.  

1966ம் ஆண்டு டாக்டர் செலினின், தந்தை ராஜ்கவுண்டர் அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார்.


இதையடுத்து செலின் குடும்பம், அமெரிக்கா குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறது. டாக்டர் செலின் உலக புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர். மருத்துவ பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறையில், மருத்துவ உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். முன்னணி தொலைக் காட்சிகளில் மருத்துவ நிபுணராகவும், ஆய்வாளராகவும் தகவல் பரிமாறி வருகிறார்.


டாக்டர் செலின் கவுண்டர், ஏற்கனவே அமெரிக்கா அமைத்த ‘எபோலா தடுப்பு குழு’விலும் இடம் பெற்றிருந்தார். தற்போது கொரோனா தடுப்பு குழுவில் உறுப்பினராக நியமித்து, புதிய அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.


தனது தந்தை பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை மூலம் சொந்த ஊருக்கு தேவையான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


அவர் கொரோனா டாஸ்க் போர்ஸ் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இவ்வாறு தங்கவேல் கூறினார்.