மேலும் செய்திகள்


நெல்லையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன்தினம் மாலையில் ஆக்சி பிரபா உறவினர் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஆக்சி பிரபாவை மட்டும் காணவில்லை.


அப்போது அவள் அங்குள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி தத்தளிப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் ஆக்சி பிரபாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


பின்னர் அங்கிருந்து ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


________________________________


சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்தில் மாதவரத்தைச் சேர்ந்த சரண்குமார் (17) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.


_________________________


 


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்தது. நீரில் அடித்து செல்லப்பட்டதில் தாய் அபிதா, மகள் அபிஷா பாத்திமா, மகன் முகமது நபாஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.