ஆப்பிளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு எப்படி சுவையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். 



தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன.

 

அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது. ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

 

அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன. அதில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.



இந்த ஆப்பிளை எப்போது சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும், அதன் நன்மைகள் கிடைக்கும்.

 

பொதுவாக இரவில் தூங்கும் முன்பு எதையேனும் சாப்பிட்டால், அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, நாள் முழுவதும் விழித்திருக்க செய்துவிடும்.

 

இம்மாதிரியான நிலைமை காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான். அப்படியெனில் ஆப்பிளை சாப்பிடுவது நல்லதா என்றால், நிச்சயம் ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள்.

ஆப்பிளின் நன்மைகள்

 

 இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நல்ல கனவைப் பெற உதவும் கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், சிறிதளவு கொழுப்பு கூட இல்லை.


 

ஆகவே இரவில் உங்களுக்கு திடீரென்று பசி எடுத்தால், ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்போது ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், இரவில் சாப்பிட்டால் பெறும் நன்மைகளையும் காண்போம்.

ஆப்பிள் பலத்தை நாம் வரம் ஒரு முறையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2 ஆகியவை உள்ளது.

 


ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம். ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும். இதில் க்யூயர்சிடின்  எனும் அமிலம் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.








புற்றுநோய் உள்ளவர்கள் ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமடையலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுவதுடன், மூளை வளர்ச்சியையும் அதிகரிக்க செய்கிறது.


இந்த பலம் நரம்பு மண்டலத்தை தூண்டி, நரம்பு சார்ந்த கோளாறுகள் வராமல் தடுக்கிறது. செரிமான கோளாறுகளை சரியாக்குவதுடன், உடலில் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.


 ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.


 ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். யார் ஒருவர் நோய்வாய்ப் பட்டுள்ளார்களோ, அவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்.


ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பணப்கள், அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். மூளையில் உள்ள செல்கள் சிதைவடைந்தால் ஏற்படுவது தான் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய்.

 

இது முதுமைக் காலத்தில் தாக்கும் நோயாகும். உங்களுக்கு முதுமையில் இம்மாதிரியான கொடுமை நடைபெறக்கூடாது என்றால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

 


ஆப்பிளை இரவில் தூங்கும் முன் சாப்பிடுவது நல்ல என்று கூறுவதன் உண்மையான காரணம், இரவில் பசி எடுத்தால், அப்போது பிஸ்கட் அல்லது இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், அதில் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும்.

 

அதுவே பசியின் போது ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் மேம்படும், கலோரிகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகள் எதுவும் இருக்காது.

 

மேலும் இரவு நேரத்தில் உடலுக்கு ஆற்றலே தேவையில்லை. எனவே இரவில் பசிக்கும் போது கண்ட பழங்களுக்கு பதிலாக, ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள், நிச்சயம் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்