திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பழைய நிலையில் உருவாக்குவோம் - ஸ்டாலின்


 


தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தால் பழைய நிலையில் உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா வீட்டிலேயே கொலை - கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்


நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் 08.11.2020 தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.


08.11.2020  நீலகிரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுப் பேசியதாவது.


மக்களுக்குத் துன்ப துயரம் ஏற்பட்டால் திமுகதான் முதலில் துடிக்கும். துணையாக நிற்கும். அந்தத் துயரம் துடைக்கப்படும் வரை பணியாற்றும். மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் அதிமுக கண்டு கொள்ளாது. அதனைக் கவனிக்காது.


ஆளும்கட்சியாக இருந்து கொண்டு இவர்கள் செய்து கொண்ட தொடர் மோதல் காரணமாக மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னும் சொன்னால் மக்களை மறந்தே போனார்கள். முதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா.


அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டுக் காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.


அப்பொழுது பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை மூலமாக பல்வேறு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பலர் கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.


மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பின்தங்கி உள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சியமைத்தால் தமிழகம் பழைய நிலைமைக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.