மேலும் செய்திகள்

 செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியின் நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவு 23.3 அடியாக உள்ள நிலையில், தற்போது 23.5 அடியை எட்டியுள்ளது. நீர் வரத்து, கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது.


_______________________________


விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், நேற்று முன்தினம் கவுசிக ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, தேவி  மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவம் விடிய, விடிய நடந்தது.இதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் மேளதாளங்கள் முழங்க பெரிய பெருமாள் சன்னதி பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நள்ளிரவு 12 மணி முதல் ஆண்டாள், ரங்கமன்னார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் துவங்கி அதிகாலை வரை நடந்தது. .


___________________________________


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் 2,668 அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகா தீப கொப்பரையை தோளில் சுமந்து கொண்டுச் சென்றுள்ளனர்.


_______________________


கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் என்.ஆர்.சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு என்.ஆர்.சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.