நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களின் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரும், வெள்ள நீரும் சூழ்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை, அடையாறு ஆற்றங்கரையோர பகுதியான ஆடுதொட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் நேரில் ஆய்வு செய்தார்.