வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 21, 22-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
பார்வையாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் 3 முறையாவது பயணம் மேற்கொண்டு பட்டியல் திருத்தப் பணிகளை பார்வையிட்டு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்துவார்கள்.
பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்வார்கள். இப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு 19.11.2020 ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன