கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவு


டி. என். கிருஷ்ணன் (பி. அக்டோபர் 6, 1928 - மறைவு. november  2, 2020) தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார்.


பெற்றோர்: ஏ. நாராயண ஐயர், அம்மிணி அம்மாள். கேரள மாநிலம் திருப்புனித்துறையில் பிறந்த இவர், தனது தந்தையிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் ஆலப்புழா கே. பார்த்தசாரதியிடம் (அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் மாணவர்) கற்றார். தொடர்ந்து அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் நேரடி மாணவராக இசை பயின்றார்.


தொழில் வாழ்க்கை


எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.


சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார்.


2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்


உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார்.


இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:


    விஜி கிருஷ்ணன் (மகள்)
    ஸ்ரீராம் கிருஷ்ணன் (மகன்)
    சாருமதி ரகுராமன்விருதுகள்


பத்மஸ்ரீ விருது, 1973; வழங்கியது: இந்திய அரசாங்கம்
சங்கீத நாடக அகாதமி விருது, 1974
சங்கீத கலாநிதி விருது, 1980; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
பத்ம பூசண் விருது, 1992; வழங்கியது: இந்திய அரசாங்கம்
சங்கீத கலாசிகாமணி விருது; 1999; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
இசைப்பேரறிஞர் விருது, 2010. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.


வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன், பத்ம, பத்மபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர்.


கடந்த 2018-ம் ஆண்டு அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவருக்கு, பவனின் பழம்பெரும் விருது வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது மறைவு கர்நாடக இசை ஆர்வலர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. 


கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.


கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவு இசை மற்றும் கலைத்துறைக்கு பேரிழப்பு. டி.என்.கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் எனவும் கூறினார்.