பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 தொகுதிகளில் வெற்றி


243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  நேற்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.


இந்நிலையில்,  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -72, ஜே.டி.யு -42, வி.ஐ.பி - 4, ஹெச்.ஏ.எம் - 4 = 122 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


மேலும், 3 தொகுதிகளில்முன்னிலையில் உள்ளது. அதில்  ஜனதா தளம் 1 தொகுதியிலும் , பாஜக 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது


பெரும்பான்மைக்கு தேவையான, 122 இடங்களை இந்தக் கூட்டணி பெற்றதையடுத்து அங்கு மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சியமையும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக கூட்டணி வெற்றி பெற வாக்களித்த பீகார் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பீகார் மக்களுக்கு நன்றி. ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது.


பாஜக கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றி. பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர். மக்களின் ஆசீர்வாதத்துடன் பீகாரில் ஜனநாயகம் மீண்டும் வென்றது.


பீகார் அனைத்து என்.டி.ஏ தொழிலாளர்களும் அவர்களுடன் பணியாற்றிய உறுதியும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. நான் தொழிலாளர்களை வாழ்த்துகிறேன் மற்றும் பீகார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.