செய்திகள் - தமிழ்நாடு


மதுரை: முகக்கவசம் இல்லாமல் சுற்றுபவர்களை கண்டுபிடிக்க தமிழகத்தில் முதல்முறையாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காண்காணிப்பு கேமரா மூலம் மாஸ்க் அணியாதவர்களை படத்துடன் தகவல் தெரிவிக்கும் ஃபர்ஸ்ட் ஜூம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையில் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஃபர்ஸ்ட் ஜூம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.


---------------------------------------------


திண்டுக்கல் செட்டியபட்டி அருகே பிசியோதெரபிஸ்ட் சின்னுசாமி என்பவருக்கு கொரோனா காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை போலீசார் விசாரணை.


திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி  ஊராட்சி மன்ற தலைவி இந்திரா குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.


----------------------------------------


தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்கு கிரானைட் கடத்தலைத் தடுக்க மாநில & மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்துவருகின்றன - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.


----------------------------------


அதிமுக அரசிடம் இடஒதுக்கீடு உரிமையை போராடிப் பெற வேண்டிய அவல நிலை தொடர்கிறது 


69% இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்பது கண்டனத்திற்குரியது  - மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்


----------------------------------


ஈஸ்வரன் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரி சென்றுள்ளதாக நடிகர் சிம்பு ட்வீட்


-----------------------------------


புதுச்சேரியில் சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்களும், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் சாலை வரி தள்ளுபடி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல்