இன்றைய ராசிபலன் 08-11-2020

 



மேஷம்


உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரிஷபம்


வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டப்படுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்விற்கான சுபச்செய்திகள் கிடைக்கும். கண்பார்வை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.


மிதுனம்


தாயின் மீது அன்பு அதிகரிக்கும். எதிலும் விரைவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீர்நிலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும்.


கடகம்


உடனிருப்பவர்களை பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் மாறுபடும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர பொருட்களினால் நெருக்கடியான சூழ்நிலைகளும், செலவுகளும் ஏற்படலாம்.


சிம்மம்


சிலருக்கு மலைப்பிரதேச பயணங்கள் சாதகமாக அமையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சக உறுப்பினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.


கன்னி


நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படுவது ஆதரவை மேம்படுத்தும். புதிய அதிகாரிகளிடம் மதிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் மேலோங்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.


துலாம்


கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


விருச்சகம்


உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டு மறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள்.


 தனுசு


உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு சாதகமாக அமையும்.


மகரம்


உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.


கும்பம்


செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படும். அரசியல் துறையினர்  வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.


மீனம்


தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சவாலான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.