செய்திகள்


 


திண்டுக்கல்லில் 2014-ல் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே முசிறி கார்குடியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் 16 வயது மாணவியை கடத்திவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மாணவி தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து போலீஸ் சென்னையில் பழனிசாமியை கைது செய்தனர்.சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் ஆளுநர் அஸ்வினி குமார் தற்கொலை கொண்டுள்ளார். மணிப்பூர், நாகலாந்து ஆளுநராக அஸ்வினி குமார் பதவி வகித்துள்ளார். கடந்த சில காலமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸ் குழுக்கள் மற்றும் ஐ.ஜி.எம்.சி.யின் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது. நவீனமயமாக்குவதன் மூலம் விமானப்படை திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம். நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறது. 88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.