புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பு

  


கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

 

இந்நிலையில் தற்போது பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு சுத்தம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.

 

எட்டாம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 10, 12, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு அப்பள்ளிகள் நடைபெறும் எனவும் அதற்காக இந்த இரு தினங்களும் பள்ளிகளை திறந்து சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

 

அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளித்து இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு கொண்டுள்ளது.