திருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்

 திருமாவளவனை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்து துறவிகள் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் எச்சரித்துள்ளார்.


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பெண்களை திருமாவளவன் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.


இதுபோல் பேசக் கூடிய தேச விரோதிகள் அதிகமாகிவிட்டனர். இதற்கு நாங்களும், அனைத்து சமுதாய மக்களும், அனைத்து சமுதாயத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.


தேர்தல் வர உள்ளது. அப்போது இந்து சமுதாய விரோதிகளுக்கு இந்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகிறோம். திருமாவளவனை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்து துறவிகள், இந்து சமுதாயத் தலைவர்கள், அனைத்துத் தாய்மார்கள் சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். இவ்வாறு அவர் கூறினார்.